வாஷிங்டன்: கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பனிப் போர் வலுத்து வருகிறது. சீனா தரப்பில் சொல்லப்படும் மரண எண்ணிக்கையை நம்ப முடியவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், கொரோனா வைரசை, 'சீன வைரஸ், வூஹான் வைரஸ்' எனக் சர்ச்சைக்குரிய வகையில் முத்திரை குத்தினார். இதற்குக் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்த சீனா, 'அமெரிக்க ராணுவம் தான், கொரோனா வைரசை சீனாவில் பரப்பியது' எனக்கூறியது.
'கொரோனா வைரசால், தங்கள் நாட்டில், 82,361 பேர் பாதிக்கப்பட்டனர். 3,316 பேர் உயிரிழந்தனர்' என, சீனா கூறியுள்ளதாக, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலை தரவுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் இதுவரை, 2,06,207 பேருக்கு கொரோனா இருப்பதும், 4,542 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலை தெரிவித்துள்ளது.