"அன்பே இவான்கா....” இணையத்தில் வைரலாகும் இவான்கா டிரம்பின் புகைப்படங்கள்

கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்திருந்தார். அவருடன் மெலானியா டிரம்ப், மகள் இவான்கா டிரம்ப், மருமகன் ஜேரட் குஷ்னர் ஆகியோரும் வருகைத் தந்திருந்தனர்.


இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்துவிட்டு ஆக்ராவில் உள்ள தாஜ் மஹாலை டிரம்ப் குடும்பம் சுற்றிப் பார்த்தது.


டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் கணவர் ஜேரட் குஷ்னர் உடன் தாஜ் மஹால் முன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். மேலும், இந்த புகைப்படங்களை தன்னுடைய சமூக ஊடகப் பக்கங்களிலும் வெளியிட்டார்.